Tags

, , , , , , , , , , , , , , , , , ,

இன்று வருவது துள்ளலிசை கலந்த ஒரு ஜோடிப் பாடல்.

தலைவனின் வீரம் கண்டு மயங்கிய நாயகி “களவாணிப் பயலே, என் மனசைத் திருடியதும் அல்லாமல், என்னையும் ஏன் காதலில் விழ வைத்தாய்” என்று கொஞ்சமே கொஞ்சமான நாணத்துடனும், மிகுந்த மோகத்துடனும் பாடுவதாய் அமைந்த பாடல்தாங்க இது. நாயகனும் காதல் மயக்கத்தில் கிறங்கி தலைவியின் கூடவே பாடுகிறார்.

ராஜா இந்தச் சூழலுக்குக் கொடுத்த அட்டகாசமான பாடலையும் மோகம், நாணம், ஆசை, காதல் என்று எல்லா உணர்ச்சிகளையும் கலந்து அபாரமாகப் பிரதிபலித்த பாடகியின் தேன் குரலையும் கேட்டு ரசிங்க மக்காஸ் !

காதலரின் மயக்கம் பாடலைப் பாடிய அந்தப் பாடகருக்கும் தொற்றிவிட்டது போல – அவரது உச்சரிப்பில் பான் சாப்பிட்டுக்கொண்டே பாடியது போன்ற குழறல் இருக்கும். இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடிய பாடகியிடம் இருந்து, மற்ற மொழியில் பாடும்போது எவ்வாறு உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் அவர் கொஞ்சம் கற்றுக் கொண்டு இருக்கலாம்.

சுமாராக ஓடிய படமிது, ஆனால் பாடல்கள் எல்லாமே லட்டு.

இதோ ஒலித் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: அடி தேடி வந்த தேவதையே

   Song: Adi Thedi Vandha Devadhaiye

* படம்: பொன்னர் சங்கர் (2011) – Ponnar Shankar

* பாடலாசிரியர்: சிநேகன்

LL Clue:

 The film was directed by the hero’s father. The hero played dual role (of brothers) in this movie.