Tags
@amas32, @arafathsm, @i_vr, @kaarthikarul, @maestrosworld, @muthiahrm, @nithyalaji, @Qatarseenu, @RagavanG, @rajabalanm, @shanthi95, @tparavai, @usharanims, @_obfuscated_
இன்று வருவது சுந்தரத் தெலுங்கில் இருந்து வெகு இனிமையான ஒரு மெலடிதாங்க.
காதல் ஜோடி இயற்கை அழகு கொஞ்சும் பொது வெளியில் ஆடிப் பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், சமீபத்தில் வெளிவந்த ஜோடிப் பாடல்களில் மிகச் சிறந்த ஒன்று என்றால் அது மிகையாகாது.
அந்த மந்தகாசமான சூழ்நிலையைக் கொண்டு வர பாடகர், பாடகி இருவருமே மிகச் சிறப்பாகவும், மென்மையாகவுமே நம் காதுகள் குளிரப் பாடியிருப்பார்கள். பல வெளிநாட்டு இசைக் கருவிகளும் நயமாகப் பயன்படுத்தப்பட்ட இப் பாடலுக்கான இசைக் கோர்ப்பு எவ்வளவு பிரமாதம் என்பதைக் கேட்டு ரசிங்க. அதிலும் பாடல் முழுக்க ஆங்காங்கே ஒலிக்கும் அந்த HORN இசை – SUBLIME !
கோரஸ் என்பது பெரும்பாலும் குத்துப் பாடல்களில் நாயகனுடைய அடிப்பொடிகளின் கதறல்களுக்கு மட்டுமே என்றாகிவிட்ட இன்றைய தமிழ் சினிமாவில், இப் பாடலில் கோரஸ் குரல்களை எவ்வளவு அழகாக காதலர்களின் இந்திர லோகத்தை சிருஷ்டிக்க ராஜா உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பதும் சிறப்பு.
நீங்க எங்கெங்கு சுற்றி அலைந்துவிட்டு, எந்த விதமான மனநிலையில் இருந்தாலும் நான்கே நிமிடங்களில் உங்கள் மனநிலையை மாற்றி மலர வைக்க, சந்தோஷப் புன்னகையை வெளிக் கொணர இந்தப் பாடலை ஆழ்ந்து கேட்டாலே போதுங்க.
படத்தோட பேர்தான் உக்கிரமாக இருக்குமே தவிர, இந்தப் பாடல் இதமான ஒரு தென்றல் (இதிலும் க்ளூ இருக்கு) 🙂
பாடல் அமைந்த ராகம்: மோஹனம் (தகவலுக்கு நன்றி: திரு. விஜய் @maestrosworld)
நீங்களும் கேட்டுட்டு சொல்லுங்க.
இதோ இசைத் துணுக்கு:
Correct Answer:
* பாடல்: அவுனா நீவேனா
Song: Auna Neevenaa
* படம்: ருத்ரமாதேவி (2015)
Film: Rudhramadevi (Telugu)
LL Clue:
This film is scheduled for its worldwide release in October 2015.