Tags
@@vbss75, @amas32, @itamizh, @i_vr, @kaarthikarul, @maestrosworld, @muthiahrm, @nithyalaji, @Qatarseenu, @rajabalanm, @tparavai, @usharanims, @_obfuscated_
ஒரு சில பாடல்கள் காற்றைப் போலே – போகிற போக்கில் நம் மனதை லேசாக சந்தோஷப் படுத்திவிட்டுச் செல்லும். அந்த மாதிரிதான் இந்தப் பாடலும் – பாடலில் குறிப்பாக எது நம்மை ஈர்க்கிறதென்று சொல்ல இயலாது, ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது அப்படியே மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
இந்தப் பாடல்கள் மட்டும் தமிழில் மொழி மாற்றமாகி வந்தபின்புதான் எனக்கு அறிமுகமாகியது. பாடல் மட்டும்தான் வந்ததாக நினைவு, படம் தமிழில் மக்கள் பார்வைக்கு வரவில்லை. ரகுமானுடன் முற்றிலும் புதிதாக இந்த நடிகை ஜோடி சேர்ந்து நடித்திருப்பது ஒரு தகவல் என்றாலும், பாடலைப் பார்த்தால் வருவது என்னவோ பீதிதாங்க 🙂
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதாவுடன் இணைந்து கோரஸ் குயில்கள் பாடும் காதல் கீதம் இதோ:
Correct Answer:
* பாடல்: ப்ரியத்தமா ப்ரியத்தமா
Song: Priyathamaa Priyathamaa
* படம்: ப்ரியத்தமா (1991) – Priyathamaa (Telugu)
Audio Link for the song:
LL Clue:
Geetha Krishna directed this movie.